சூர்யா - 44 படப்பிடிப்பு நிறைவு!
சூர்யா - 44 அப்டேட்...
சூர்யா - 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த சூழலில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.