100 மில்லியன் பார்வைகளைக் கடந்த வாட்டர் பாக்கெட்!
கடந்த வாட்டர் பாக்கெட் பாடல் புதிய சாதனை...
ராயன் திரைப்படத்தின் வாட்டர் பாக்கெட் பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் (தனுஷ்) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடலின் காட்சிகள் பெரிதாக ரசிக்க வைத்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்த அப்டேட்!
நடிகர்கள் சந்தீப் கிஷனுக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையான காதல் காட்சிக்காக இப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதனை, கானா காதர் எழுதிய இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
இப்பாடலின் விடியோவை எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்குப் பின் முழு விடியோவை வெளியிட்டனர்.
தற்போது, யூடியூபில் இப்பாடல் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை, தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.