தேசிய விருது வென்ற நித்யா, தன்ஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில்...  
செய்திகள்

மீண்டும் தனுஷுடன் நடிக்கிறேன்..! தேசிய விருதுக்குப் பின் அறிவித்த நித்யா!

நடிகர் தனுஷுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக நித்யா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

DIN

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா. அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். தற்போது, தனுஷ் இயக்கும் 4-வது படமான இட்லி கடை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அதை உறுதிப்படுத்தியுள்ளார். தேசிய விருது பெற்ற பின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா மேனன் பேசியதாவது:

தேசிய விருதுக்கு காரணம் முன்தயாரிப்புகள் கிடையாது. கதாபாத்திரத்தைப் புரிந்து கொள்வதும் இயற்கையாக இருப்பதும்தான். முதல்முறையாக விருது வாங்கியதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இதுவரை நடித்ததற்கான ஒரு அதிகாரபூர்வ அங்கீகாரமாக பார்க்கிறேன்.

ஒரு கலைஞராக இந்த விருது முக்கியமானது. இந்த விருதினை எனது படக்குழுவுக்கும் சமர்பிக்கிறேன்.

நான், தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து மீண்டும் தனுஷ் உடனும் நடிக்கிறேன். தன்ஷுடன் நடித்த இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அடுத்தப் படம் குறித்தும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.

சமீபத்தில் தனது பெயர் நித்யா மேனன் கிடையாது நித்யா மெனன் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT