செய்திகள்

விரைவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ!

DIN

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து  திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆனால், இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவை, பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் உருவாக்கினர். அந்த விடியோவின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

ஆனால், இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் முழுமையான விடியோ இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், 1 மணிநேரம் 21 நிமிடங்கள் கொண்ட விக்னேஷ் சிவன் - நயன் தாரா திருமண ஆவண விடியோவை விரைவில் வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT