ரன்பீர் கபூர், ஜூனியர் என்டிஆர், ரன்வீர் சிங். 
செய்திகள்

தேவரா 2ஆம் பாகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங்..! கொரடால சிவா விருப்பம்!

நேர்காணல் ஒன்றில் தேவரா படத்தின் இயக்குநர் கொரடால சிவா கூறியதாவது:

DIN

ஜூனியர் என்டிஆரின் 30வது படமான தேவரா வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கொரடால சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற தேவரா ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படக்குழு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தேவரா படத்தின் இயக்குநர் கொரடாலா சிவா கூறியதாவது:

தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் யாரையும் நடிக்க வைக்க திட்டமில்லை. மாறாக, சில முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறது.

தேவாராவின் உலகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங் இருந்தால் நன்றாக இருக்கும். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இரண்டாம் பாகத்தின் 20 நாள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. முன் தயாரிப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

இதையும் படிக்க: தென்னிந்தியாவுக்கு சொந்தமானவர் ஜான்வி கபூர்..!

மற்றொரு நேர்காணலில் ஜூனியர் என டிஆர், “திரையரங்குகளில் நாங்கள் எதிர்பார்த்தது வேறு. சினிமாவை மக்கள் பார்க்கும் விதம் மாறிவிட்டது” எனக் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT