விஜய் 69 பட போஸ்டர்.  
செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் 69! அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்!

பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

DIN

ஹிந்தியில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக அசத்தி வருபவர் அனுபம் கெர். 69 வயதாகும் இவர் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

2022இல் வெளியான தி காஷ்மீா் ஃபைல்ஸ் மிகுந்த சர்சையை ஏற்படுத்தியது.

கங்கனா ரணாவத் இயக்கியுள்ள எமர்ஜென்சி படத்திலும் நடித்துள்ளார். தி சிக்னச்சர், விஜய் 69 என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதில் விஜய் 69 படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

நெட்பிளிக்ஸ், ஒய்ஆர்எஃப் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆகாஷ் ராய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுன்கி பாண்டே, மிஹிர் அகுஜா நடித்துள்ளார்கள்.

69 வயதான கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் கடைசி படமான விஜய் 69 படத்தின் தற்காலிக தலைப்பு போலவே இருப்பதால் எக்ஸில் விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்திக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT