செய்திகள்

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாச்சனா! போட்டியாளர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் 24 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை சாச்சனா, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

DIN

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் 24 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை சாச்சனா, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இது தொடர்பான முன்னோட்ட விடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சாச்சனா, வெளியே யாருடைய விளையாட்டு மிகவும் மோசமாக உள்ளது என்பது குறித்து போட்டியாளர்களிடையே பேசுவதைப் போன்றும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சாச்சனா வெளியேற்றம்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 5வது நாள் இன்று. முதல் நாளில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். நாமினேஷனில் வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் அதிக எண்ணிக்கையில் சாச்சனாவுக்கு வாக்களித்ததால், அவர் வெளியேற்றப்பட்டார்.

வெளியேறும்போது, அவரின் தற்காலிக கோப்பையையும் போட்டு உடைத்துவிட்டு வருமாறு பிக் பாஸ் அறிவுறுத்தியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வந்த சாச்சனா, கண்ணீருடன் அதனைப் போட்டு உடைத்துவிட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் பலரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே சாச்சனா வெளியேற்றப்பட்டதால், பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்தனர்.

பிக் பாஸ் 8 சர்ச்சை

கமலஹாசன் தொகுத்து வழங்கியபோது எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறிவிட்டு, முறைப்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பருவார்கள், ஆனால், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்போது, ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என்ற பெயரில், காரணங்களே இன்றி போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதாக பலர் விமர்சித்து வந்தனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: ரஞ்சித் - ரவீந்தர் மோதல் என்ன ஆனது?

வெளியேற்றப்பட்ட சாச்சனா, 50 நாள்கள் கடந்த பிறகு வைல் கார்டு மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. கோப்பையை உடைக்கச் சொல்லி வெளியேறியதால், அவர் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரமாட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், யாரும் எதிரபாராத வகையில் வெளியேறிய 5வது நாளே சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனால் பிக் பாஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது எனலாம்.

இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சீரியலிலிருந்து விலகிய நடிகர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT