நடிகர் சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா டீசர்!
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். 1980-களிலிருந்து நடித்துவருபவர் பல நல்ல கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கினார்.
தற்போதுவரை, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.
அடுத்ததாக, இவர் நடித்துவரும் விஸ்வாம்பரா திரைப்படம் 2025-ல் திரைக்கு வருகிறது. யுவி கிரியேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகள் கொண்டுள்ளதால் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆர்ஆர்ஆர் படத்துக்காக இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்த பாடல் ஆஸ்கர் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கிராஃபிக் காட்சிகள் கவனம் பெறுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.