முகப்பு
நடிகர் தனுஷ்
செய்திகள்

இணையத்தில் கசிந்த இட்லி கடை படப்பிடிப்பு காட்சி?

நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார்...

செய்திகள்

இணையத்தில் கசிந்த இட்லி கடை படப்பிடிப்பு காட்சி?

நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார்...

Updated On : 14 அக்டோபர், 2024 at 5:55 AM
நடிகர் தனுஷ்
பகிர்:

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் கசிந்ததாகத் தகவல்.

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.

இதற்கிடையே, தனுஷ் இயக்கும் 4-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார். படத்திற்கு ’இட்லி கடை’ எனப் பெயரிட்டுள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருவதாகத் தகவல்.

இப்படத்தில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இட்லி கடை படப்பிடிப்பின்போது நடிகர் தனுஷ் காட்சியொன்றை விவரிக்கும் விடியோ இணையத்தில் கசிந்தது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உடனே அக்காட்சி நீக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →