நடிகர் ஜெயசூர்யா சிறப்பு விசாரணைக்குக் விழுவிடம் பதிலளித்து திரும்பியபோது...  S.Gopakumar
செய்திகள்

பாலியல் வழக்கு: சிறப்பு விசாரணைக் குழுவிடம் பதிலளித்த நடிகர் ஜெயசூர்யா!

சிறப்பு விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகி தன் மீதான பாலியல் குற்றவழக்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் ஜெயசூர்யா.

DIN

சிறப்பு விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகி தன் மீதான பாலியல் குற்றவழக்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் ஜெயசூர்யா.

இன்று (அக்.15) திருவனந்தபுரத்தில் உள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

நடிகர் ஜெயசூர்யா சிறப்பு விசாரணைக்குக் விழுவிடம் பதிலளித்து திரும்பியபோது...

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.

நடிகை மினு முனீர், சோனியா மல்ஹார் ஆகியோர் நடிகர் ஜெயசூர்யா, தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்கள். இது, ஜெயசூர்யா ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

சோனியா மல்ஹார், “ தொடப்புழாவில் நடைபெற்ற பிக்மன் படப்பிடிப்பில் நான் கழிவறையில் இருந்து வெளியே வரும்போது, யாரோ என்னை பின்புறமாக இருந்து தொட்டார்கள். பார்த்தால் அது நடிகர் ஜெயசூர்யா. நான் அவரைத் தள்ளிவிட்டேன். பிறகு, அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு நாம் நண்பர்களாக தொடராலம்” என்றார்.

இவருடன் சேர்ந்து மினு முனீர் என்ற நடிகையும் ஜெயசூர்யா மீது குற்றம் சுமத்தியிருந்தார். ”ஒருமுறை நான் கழிவறையில் இருந்து வரும்போது பின்புறமிருந்து கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டார்” என்றார்.

பொய் எப்போதும் உண்மையைவிட வேகமானது

தனது 46ஆவது பிறந்தநாளில் ஜெயசூர்யா சமூகவலைதள பக்கத்தில், “ நானும் என் குடும்பமும் கடந்த மாதத்திலிருந்து அமெரிக்காவில் இருக்கிறோம். இதற்கிடையே, என் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது எனக்கும், என் குடும்பத்துக்கும், என்னை அறிந்தவர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதை, சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்தப் புகார் தொடர்பாக என் சட்ட ஆலோசகர்கள் வழக்கை தொடர்வார்கள்.

மனசாட்சி இல்லாதவர்களால் யார் மீது வேண்டுமானாலும் போலியான குற்றச்சாட்டை வைக்க முடியும். இங்கு என் பணிகள் முடிந்ததும் விரைவில் நாடு திரும்புவேன். பொய் எப்போதும் உண்மையைவிட வேகமானது. ஆனால், உண்மை வெல்லும். நான் நம் நீதியமைப்பை நம்புகிறேன். இந்த பிறந்தநாளை இவ்வளவு வலிமிக்கதாக மாற்றியவர்களுக்கு நன்றி. பாவம் செய்யாதவர்கள் கற்களை எறியட்டும், ஆனால் பாவம் செய்தவர்கள் மீது மட்டுமே" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT