செய்திகள்

'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ வெளியீட்டுத் தேதி!

ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரையரங்க வெளியீடு குறித்து...

DIN

இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All we imagine as light) திரைப்படம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றது.

இந்தப் படம், பிரான்சின் பெட்டிட் சாகோஸ் மற்றும் இந்தியாவின் சாக் & சீஸ் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ இண்டோ-பிரெஞ்ச் கூட்டுத் தயாரிப்பாகும். இத்திரைப்படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி நடிகர் ராணா டக்குபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது.

படவெளியீடு பற்றி இயக்குநர் பாயல் கபாடியா பேசியபோது, "இந்த படத்தை செதுக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டோம். ராணாவின் ஸ்பிரிட் மீடியாவுடன் இணைந்திருப்பது படத்தை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் எடுத்து செல்லும் என்பதில் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய படம் இந்தியத் திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. இந்திய பார்வையாளர்கள் திரையரங்குகளில் டிக்கெட் வாங்கி பெரிய திரையில் படத்தைக் கொண்டாடுவதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.

நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி பேசியதாவது, “இந்தியத் திரையரங்குகளில் இந்த சிறந்த படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள கதைகளைக் கொண்டு வருவதை ஸ்பிரிட் மீடியா நோக்கமாகக் கொண்டுள்ளது. பாயலின் அழகான இந்தத் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT