முகப்பு
செய்திகள்

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் அப்டேட்!

மம்மூட்டி படத்தின் அப்டேட்...

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:55 PM
நடிகர் மம்மூட்டி.
பகிர்:

நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் மம்மூட்டி, ஜித்தின் கே. ஜோஸ் இயக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தகவல். படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி தயாரித்து நடித்த, ‘டோமினி அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மம்மூட்டி கம்பெனி நிறுவனம் டொமினிக் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மம்மூட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்து விரைவில் டோமினிக் படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ரிவால்வர் ரீட்டா டீசர்!

இதில், முதலில் இம்மாத இறுதிக்குள் இப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.