செய்திகள்

வீர தீர சூரனில் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி!

வீர தீர சூரன் படத்தின் அப்டேட்...

DIN

வீர தீர சூரன் படத்தின் சிங்கிள் ஷாட் காட்சி குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன்.

இரு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க: பிளாக் வசூல்!

முன்னதாக, இப்படத்திற்காக 10 நாள்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி ஒன்றைக் குறிப்பிட்டு கலைத்தாயின் இளைய மகன் என இயக்குநர் அருண் குமாரை எஸ். ஜே. சூர்யா பாராட்டியிருந்தார். அது என்ன காட்சி என பலரிடமும் ஆர்வம் எழுந்தது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, ”நடிகர் விக்ரமுடன் நடித்துவரும் (வீர தீர சூரன்) படத்தில் ஒரு 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. அக்காட்சியால், நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.” எனக் கூறியுள்ளார்.

இதனால், எஸ். ஜே. சூர்யா குறிப்பிட்ட காட்சி இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

SCROLL FOR NEXT