பிக் பாஸ் பெண்கள் அணியினர் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: இந்த வார 'நாமினேஷன்' பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கத் தகுதியற்ற நபர் யார்? என்பது குறித்து தேர்வு செய்யப்படும். இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தலா இரு நபர்களைத் தேர்வு செய்து நாமினேஷன் செய்யலாம்.

அதிக நபர்களால் தேர்வு செய்யப்பட்ட நபர், நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுவர்.

அந்தவகையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 21) பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரு நபர்களை தக்க காரணங்களுடன் கூறினர்.

இதில், அதிக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு, நாமினேஷன் பட்டியலில் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, முதலில் ஜாக்குலின் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த இரு வாரங்களாக நாமினேஷன் பட்டியல் இடம்பெற்றார். இதனைத் தொடர்ந்து அன்ஷிதா, பவித்ரா ஜனனி, செளந்தர்யா, தர்ஷா குப்தா, ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

இதேபோன்று ஆண்கள் அணியில் சத்யா, முத்துக்குமரன், அருண் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றனர்.

இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெறும் நபர் வீட்டிற்குள் இருக்க அனுமதிக்கப்படுவர்.

மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கத் தகுதியற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டு இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.

இதற்கு முந்தைய இரு வாரங்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று ரவீந்தரும், அர்ணவும் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

SCROLL FOR NEXT