6000 திரைகளில் கங்குவா!
கங்குவா திரை எண்ணிக்கை குறித்து...
கங்குவா திரைப்படம் இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது, நடிகர் சூர்யா, படத்தின் நாயகி திஷா பதானி, நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் வட இந்தியாவில் தொடர் புரமோஷன்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கேரள முதல்வராக டொவினோ தாமஸ்!
இந்த நிலையில், இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென ஒட்டுமொத்தமாக 6000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவே, நடிகர் சூர்யா நடித்து அதிக திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.