செய்திகள்

10 ஆண்டுகளை நிறைவு செய்த கத்தி!

கத்தி திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள்...

DIN

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014 அக்.22 ஆம் தேதி வெளியான திரைப்படம் கத்தி. விவசாயிகளின் தண்ணீர் மற்றும் வாழ்வாதரப் பிரச்னையைப் பேசும் படமாக உருவான இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 100 கோடிக்கு அதிகமாக வசூலித்த பிளாக்பஸ்டர் திரைப்படமானது.

துப்பாக்கி படத்திற்குப் பின் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவான படமென்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது, வீணாகாத அளவிற்கு விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று அந்த ஆண்டு வெளியானவற்றில் சிறந்த படமாகவும் கருதப்பட்டது.

இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் நடித்த இப்படத்தின் பாடல்களும் வைரலாகின. முக்கியமாக, அனிருத் இசையமைத்த படத்தின் பின்னணி இசை அன்று பெரிதாகப் பேசப்பட்டது.

இதையும் படிக்க: 6000 திரைகளில் கங்குவா!

கத்தி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளைப் பகிர்ந்து விஜய் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT