நடிகை தமன்னா பாட்டியா.  படங்கள்: இன்ஸ்டா / தமன்னா பாட்டியா.
செய்திகள்

500 மில்லியன் பார்வைகளைக் கடந்த கவர்ச்சி பாடல்..! தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு விடியோ!

நடிகை தமன்னாவின் பாடல் விடியோ ஒன்று 500 மில்லியன் (50 கோடி) பார்வைகளைக் கடந்தது குறித்து பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகை தமன்னாவின் பாடல் விடியோ ஒன்று 500 மில்லியன் (50 கோடி) பார்வைகளைக் கடந்தது குறித்து பதிவிட்டுள்ளார்.

தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என பலருக்கும் ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 போன்ற படங்களும் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.

2018இல் வெளியான ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகியது. இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர். பங்கஜ் திரிப்பாதி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை அமர் கௌசிக் இயக்க ஜியோ ஸ்டுடியோஸும் மட்டோக் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் தமன்னா ஆடிய ஒரு பாடல் விடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் பாடம் யூடியூப்பில் 500 மில்லியன் (50 கோடி) பார்வைகளைத் தாண்டியுள்ளது.

மேலும், இந்தப்படம் ரூ.874.58 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்த ஆஜ் கி ராட் பாடலின் சிறிய விடியோவினைப் பதிவிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்த விடியோ பதிவிட்ட சில நிமிடங்களில் மில்லியன் பார்வைகளை கடந்தது. தற்போது ஒரு நாளைக்கு முன்பே 42 மில்லியனை (4.2 கோடி) கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இவரா அவர்?... எதிர்நீச்சல்... காயத்ரி!

நவ. 19-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

வேட்டுவம் கிளைமேக்ஸுக்கு காத்திருக்கும் ஆர்யா!

தமிழகம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிராக மனு - உச்ச நீதிமன்றம் பதில்!

மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி என்பது உண்மையல்ல: துரைமுருகன்

SCROLL FOR NEXT