செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

DIN

ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன. இப்படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய படங்கள் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம், நாளை(அக். 25) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்தத் திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தை சிம்பிளி சௌத் ஓடிடியில் காணலாம்.

தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான படம் ‘ஹிட்லர்’. இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை (அக். 25) வெளியாகிறது.

கயல் ஆனந்தியின் ஒயிட் ரோஸ் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ள சத்யபாமா திரைப்படம் நாளை(அக். 25) ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.

மர்மதேசம் தொடர் இயக்குநர் நாகா இயக்கத்தில் சாய் தன்ஷிகா பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ள ஐந்தாம் வேதம் இணையத் தொடர் ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் நாளை (அக். 25) வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்கள் - வரலாறு, வழிபாடு, விழாக்கள்

எவரெஸ்டில் பனிப்புயல்: 1000க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு!

பழங்குடியின மக்களுக்காக..!” வாகன வசதிகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்!

Typhoon Matmo!” China-வைத் தாக்கும் கோரப் புயல்! 3,50,000 பேர் இடமாற்றம்!

பூந்தளிர்... ஆஷு ரெட்டி!

SCROLL FOR NEXT