அமரன் சிறப்பு திரையிடலில் பங்கேற்ற சாய் பல்லவி, சிவகார்த்திகேயன்.  
செய்திகள்

ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்ட அமரன்..! குவியும் வாழ்த்து!

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் ராணுவ வீரர்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டுள்ளது.

DIN

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் சிறப்புக் காட்சி தில்லியில் உள்ள இந்திய ராணுவத்துக்கு திரையிடப்பட்டது. அவர்களிடமிருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தத் திரையிடலில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் பங்கேற்றார்கள்.

அமரன் சிறப்பு திரையிடலில் பங்கேற்ற சாய் பல்லவி, சிவகார்த்திகேயன்.

தீபாவளிக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெறுமென் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT