பிளடி பெக்கர் பாடல்.  
செய்திகள்

பிளடி பெக்கர்: படத்தில் இடம்பெறாத பாடல் வெளியீடு!

நடிகர் கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் படத்தின் 2ஆவது பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் இருக்கிறது. பிளடி பெக்கர் பாடல்.

DIN

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

நெல்சன் தயாரிப்பில் முதல் படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடித்துள்ளார். இப்படத்திற்கு, ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் 2ஆவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தப் பாடல் திரையரங்குகளில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புரமோஷனுக்காக மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.

ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்தப் பாடல் டிரெண்டிங்கில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT