ஜெயம் ரவி நடிப்பில் உருவான பிரதர் திரைப்படத்தின் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை.
இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழில் வெற்றி பெற்ற நகைச்சுவை பாணி இயக்குநராக வலம் வந்தவர்.
இவரது படங்களில் நடிகர் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் பெரியளவு கவனம் பெற்றவை. இன்றுவரை, இவரது ‘நண்பண்டா’ வசனம் நண்பர்களுக்கு இடையேயான பேச்சுகளில் இடம்பெறத் தவறுவதில்லை. தற்போது, நடிகர் ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின், ‘மக்காமிஷி’ பாடல் மிகவும் புகழ்பெற்றது. தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி பிரதர் வெளியாகிறது.
இதையும் படிக்க: ‘இது என்றென்றும் என் இதயத்தை துளைக்கும்...’: ஜானி மாஸ்டர்
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. அதை வெளியிடாமல் துபையில் சொகுசு கப்பலில் படக்குழுவினர் புரமோஷனில் ஈடுபட்டுள்ளனர். இதனால், டிரைலரை வெளியிடாமல் நேரடியாக புரமோஷன் பணிகளில் யாராவது ஈடுபடுவர்களா என ரசிகர்கள் கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.