செய்திகள்

‘மான்ஸ்டர் மெஷின்’ அனுபவங்களைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த பாடல் அனுபவம்....

DIN

நடிகை ஸ்ருதி ஹாசன் இசை ஆல்பத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியானவால்டர் வீரய்யா, வீரசிம்மா ரெட்டி, சலார் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘இனிமேல்’ ஆல்பத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையே, ஸ்ருதி ஹாசன் தன் காதலரான ஷாந்தனு ஹசாரிகாவைப் பிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் உறவிலிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், ஸ்ருதி ஹாசன் எழுதி, இசையமைத்து, பாடிய ‘மான்ஸ்டர் மெஷின்’ பாடல் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்ததையொட்டி அதுகுறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மான்ஸ்டர் மெஷின் வெளியாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. நிறைய அனுபவங்கள். முக்கியமாக, இசையிலிருந்து விடியோ உருவாக்கம் வரை உடனிருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. என் குரல் மற்றும் கனவுகள் வழியாக உலகை தொடர்புகொள்வதற்கான திறனைப் பெற்றிருப்பதில் உள்ள ஆசிர்வாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இத்தனை ஆண்டுகளில் நான் தெரிந்துகொண்டது, எது உங்களை மோசமாக்குகிறதோ அதுவே அழகையும் நேர்மையையும் தருகிறது. இருள் கற்பிப்பது வெளிசத்தின் மீதான நேசத்தையும் நிழலையும்தான். அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT