இதுவரை பகிராத புகைப்படங்கள்... செம்பருத்தி நினைவுகளைப் பகிர்ந்த நடிகை ஷபானா!
செம்பருத்தி தொடரின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் நடிகை ஷபானா பகிர்ந்துள்ளார்.
Sembaruthi Serial : செம்பருத்தி தொடரின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ஷபானா ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், தான் செம்பருத்தி தொடரின் ஆடிஷனில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் முதல், நிறைவடையும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வரை பகிர்ந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 முதல் 2022 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செம்பருத்தி தொடர் ஒளிபரப்பானது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த பெண், பணிபுரியும் வீட்டின் முதலாளி மகனையே திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அந்த வீட்டில் உள்ளவர்களை எதிர்கொண்டு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து செம்பருத்தி தொடர் ஒளிபரப்பானது.
Advertisement
Advertisement
இத்தொடரில் நடிகை ஷபானா நாயகியாகவும், கார்த்திக் ராஜ் நாயகனாகவும் நடித்தனர். இத்தொடர் ஷபானாவுக்கு முதல் தொடர் என்றபோதிலும் தொடர்ந்து சிறப்பான நடிப்பை வழங்கி, பார்வதியாக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
முதல் தொடரே தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பானதால், இத்தொடரில் நடித்த பலருக்கும் பெரிய அங்கீகாரமாக செம்பருத்தி தொடர் அமைந்தது.
இத்தொடருக்குப் பிறகு சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி தொடரில் ஷபானா நடித்திருந்தார்.
பிறகு விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது போலீஸ் போலீஸ் என்ற இணையத் தொடரில் ஷபானா நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு செம்பருத்தி தொடரின் ஆடிஷனில் கலந்துகொண்ட புகைப்படம் உள்பட, அத்தொடரின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை ஷபானா பகிர்ந்துள்ளார்.
Zee tamil sembaruthi serial fame shabana shares memories with fans
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.