செய்திகள்

முன்பதிவில் அசத்தும் அமரன்!

அமரன் திரைப்படத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவில் வேகமாக தீர்ந்து வருகின்றன.

DIN

அமரன் திரைப்படத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவில் வேகமாக விற்பனையாகி வருகின்றன.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 2 மணி 48 நிமிடங்கள் (2.48) கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவு வாயிலாக விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. தீபாவளி வெளியீடாக அமரனுடன் பிரதர், பிளடி பெக்கர், லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின்றன. ஆனாலும், அமரன் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்கள் ஹவுஸ்புல் ஆகி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அமரன் படமே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

SCROLL FOR NEXT