டிக்கெட் முன்பதிவில் அசத்தும் மங்காத்தா!
மங்காத்தா மறுவெளியீடு டிக்கெட் முன்பதிவிலேயே அசத்தி வருகிறது...
மங்காத்தா திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படங்களிலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்த திரைப்படமான மங்காத்தா நாளை (ஜன. 23) 400க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக மறுவெளியீடாகிறது.
இதில், தமிழகத்திலேயே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே 1 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழகத்தின் பல திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் விற்கும் நிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, சென்னை ரோகினி திரையரங்கில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகியுள்ளன.
இதனால், விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா திரைப்படங்கள் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்தது போல், மங்காத்தா திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.