தலைவனே - கங்குவா பாடல் வெளியீடு!
கங்குவா பாடல் வெளியீடு...
சூர்யாவின் கங்குவா படத்தில் இடம்பெற்ற தலைவனே பாடல் வெளியாகியுள்ளது.
சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ராகவா லாரன்ஸின் புல்லட் கிளிம்ஸ்!
இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென ஒட்டுமொத்தமாக 6000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற ‘தலைவனே’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்பாடலை மதன் கார்கி எழுதியுள்ளார். ஆனந்த் ஸ்ரீனிவாஸ், அபர்ணா ஹரிகுமார் உள்பட 18 பேர் இப்பாடலை பாடியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.