திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த நடிகா் மோகன்லால். DNS
செய்திகள்

எந்த அதிகாரக் கும்பலிலும் நான் இல்லை: பாலியல் புகார் விவகாரத்தில் மோகன்லால்

மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார் விவகாரத்தில் எந்த அதிகாரக் கும்பலிலும் நான் இல்லை என்று நடிகர் மோகன்லால் சனிக்கிழமை தெரிவித்தார்.

DIN

மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார் விவகாரத்தில் எந்த அதிகாரக் கும்பலிலும் நான் இல்லை என்று நடிகர் மோகன்லால் சனிக்கிழமை தெரிவித்தார்.

மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் நிகழ்வுகளை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா குழு அறிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீதான பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புகார்களை விசாரிக்க 7 காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட பல்வேறு நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டது.

நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து, மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு ராஜிநாமா செய்தது. இதைத் தொடர்ந்து, மோகன்லால் முதன்முறையாக செய்தியாளர்களைச் சனிக்கிழமை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

மலையாள திரையுலகம் ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரியும் மிகப்பெரிய தொழில். அங்கு எழுந்துள்ள பிரச்னைகளை மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தால் தீர்க்க முடியவில்லை. தவறு செய்தவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

'ஹேமா குழு' அறிக்கையை வெளியிட்டது அரசின் சிறந்த முடிவு. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று மலையாள திரையுலகில் எந்த அதிகாரக் கும்பலிலும் நான் அங்கம் வகிக்கவில்லை. அத்தகைய கும்பல் இருப்பதைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

ஹேமா குழு அறிக்கையில், 'மலையாள திரையுலகின் தொழில்துறையை சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட 10-15 பேர் அடங்கிய அதிகார 'கும்பல்' கட்டுப்படுத்துகிறது. இவர்கள் திரையுலகின் பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர்' என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பேரணியில் வன்முறை:

பாலியல் புகாரில் சிக்கியுள்ள எம்எல்ஏ முகேஷ் பதவி விலக வலியுறுத்தி கொல்லம் எம்எல்ஏ அலுவலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. தொடர்ந்து, போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

ராஜிநாமாவுக்கு அவசியமில்லை: இதனிடையே, பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே காரணத்துக்காக எம்எல்ஏ முகேஷ் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT