நடிகர் கமல்ஹாசன். 
செய்திகள்

யாரோ இவன் யாரோ... கமல் பாடிய மெய்யழகன் பாடல்: விடியோ

மெய்யழகன் பாடலைப் பாடிய கமல்ஹாசன்...

DIN

மெய்யழகன் படத்தில் கமல்ஹாசன் பாடிய விடியோ வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன், முதல் பார்வை போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில், நடிகர் அரவிந்த் சுவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் செப்.27 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. தொடர்ந்து, இசைத்தளங்கள் மற்றும் யூடியூபில் பாடல்கள் வெளியாகின.

அதில், ’நான் போகிறேன்’ மற்றும் ’யாரோ இவன் யாரோ’ எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

கமல்ஹாசன்.

மென்சோகத்தைக் கூறும் பாடலாக யாரோ இவன் யாரோ பாடல் உமா தேவியின் வரிகளில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் நடிகர் கமல்ஹாசன் குரல் உருவாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தற்போது, நடிகர் கமல்ஹாசன் பாடிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவுக்கு ரூ. 3 கோடி செலவு: நகா்மன்ற கூட்டத்தில் தகவல்

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT