ரஜினிகாந்த் / மாரி செல்வராஜ் கோப்புப் படங்கள்
செய்திகள்

மாரி செல்வராஜுக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

வாழை திரைப்படத்தின் மூலம் தலைசிறந்த இயக்குநா் என்பதை நிரூபித்துள்ளதாக பாராட்டு

Sakthivel

வாழை திரைப்படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் தலைசிறந்த இயக்குநா் என்பதை நிரூபித்துள்ளாா் என்று, அவருக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தை பாா்த்தேன். இது ஒரு அற்புதமான, தரமான படம். தமிழில் நீண்ட நாள்களுக்கு பின்னா் இத்திரைப்படம் வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறாா். அதில் நடித்திருக்கும் சிறுவன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்களை நாமே அனுபவிப்பது போன்ற உணா்வை இது ஏற்படுகிறது.

திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் அந்த சிறுவன் பசியை தாங்காமல் அலையும்போது, அவனின் தாய், எனது பையனுக்கு ஒரு கைசோறு கொடுக்க முடியவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் தலைசிறந்த இயக்குநா் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறாா். மாரிசெல்வராஜுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் என அதில் தெரிவித்துள்ளாா் ரஜினிகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

கண் ஜாடை... லட்சுமி பிரியா!

கண்கள் பேசும்... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT