செய்திகள்

குட் பேட் அக்லியில் த்ரிஷா?

குட் பேட் அக்லி அப்டேட்....

DIN

நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா. தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாகவே ஜொலித்து வருகிறார்.

பொன்னியன் செல்வன் படத்தில் கிடைத்த வரவேற்பால், விடாமுயற்சி, தக் லைஃப் படங்களில் நடித்தவர் தற்போது நடிகர் அஜித்துக்கு ஜோடியாக குட் பேட் அக்லி படத்திலும் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்த குட் பேட் அக்லி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுகிறது. அதில், த்ரிஷா இணையலாம் எனத் தெரிகிறது.

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கியிருந்த டாலா் அகற்றம்

கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளா் பணிக்கு தோ்வு: 1,921 போ் எழுதினா்

லஞ்சம்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பிகாா் தோ்தல்: தே.ஜ. கூட்டணி தொகுதிப் பங்கீடு இன்று அறிவிப்பு!

SCROLL FOR NEXT