முகப்பு
செய்திகள்

வெற்றிமாறனை வாழ்த்திய மஞ்சு வாரியர்!

இன்று இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாள்...

Updated On : 4 செப்டம்பர், 2024 at 12:00 PM
இயக்குநர் வெற்றிமாறன், நடிகை மஞ்சு வாரியர்.
பகிர்:

இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்தநாளுக்கு நடிகை மஞ்சு வாரியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை - 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பு முழுமையாக முடியும் எனத் தெரிகிறது. இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக இப்படம் வருவதால் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமாத்துறையினர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில், விடுதலை - 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் தன் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் வெற்றிமாறனுடனான புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →