ஜோக்கர் 2 போஸ்டர்.  
செய்திகள்

வெனிஸ் திரைப்பட விழாவில் பார்வையாளர்களிடம் 11 நிமிட பாராட்டைப் பெற்ற ஜோக்கர் 2!

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஜோக்கர் 2 படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

DIN

இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘ஜோக்கர்’.

ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞன்.

ஆனால், ஒருகட்டத்தில் குடும்பமும் சமூகமும் அவனை எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அபாரமான திரைக்கதையால் சொன்ன படமே ‘ஜோக்கர். படத்தில் பீனிக்ஸுன் சிரிப்பும் மிகப்பிரபலம்.

விருது நாயகன்

மேலும், இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

தற்போது, அதே கூட்டணியில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இதன் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா

இந்நிலையில் 81ஆவது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஜோக்கர் 2 படத்துக்கு 11 நிமிடம் அரங்கத்திலுள்ள அனைவரும் எழுந்து பாராட்டியுள்ளார்கள்.

டிரைலருக்கு ரசிகர்களும் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். இப்படம், அக்டோபர் 4 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT