ஆட்டைத் தூக்கிக்கொண்டு கோட் படம் பார்க்க வந்த கூல் சுரேஷ்! (விடியோ)
நடிகர் கூல் சுரேஷ் கோட் திரைப்படத்துக்கு ஆட்டைத் தூக்கிக்கொண்டு வந்த விடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் கூல் சுரேஷ் கோட் திரைப்படத்துக்கு ஆட்டைத் தூக்கிக் கொண்டு வந்த விடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் இன்று (செப்.5) கோட் திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டாசு வெடித்து ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கோட் உடன் கோட்
இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் ஆட்டைத் தூக்கிக் கொண்டு படம் பார்க்க வந்த விடியோ வைரலாகி வருகிறது.
எப்போதும் எதையாவது கவனம் ஈர்க்கும்படி செய்வது கூல் சுரேஷின் பாணி. கோட் படம் என்பதால் ஆங்கிலத்தில் ஆட்டை அவ்வாறு அழைப்பதால் அதைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் சிலர் கூல் சுரேஷை விமர்சித்தும் வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.