வெற்றி விழாவில் சரிபோதா சனிவாரம் படக்குழு.  படம்: எக்ஸ் / டிவிவி என்டர்டெயின்மென்ட்
செய்திகள்

எது உண்மையான வெற்றி? நாயகன் எஸ்.ஜே.சூர்யா..! வெற்றி விழாவில் நானி பேசியதாவது?

சரிபோதா சனிவாரம் வெற்றி விழாவில் நடிகர் நானி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

DIN

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.

நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களை பெற்றன.

தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் கடந்த ஆக.29இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

வெற்றியை கொண்டாடிய படக்குழு.

5 நாள்களில் ரூ.75.26கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் நானி பேசியதாவது:

எது உண்மையான வெற்றி?

படத்தின் வெற்றியை எப்படி மதிப்பிடுவது? அதைக்குறித்து நான் அதிகம் யோசித்து இருக்கிறேன். பல கோடி வசூல் போஸ்டர்களா? அல்லது பிளாக்பஸ்டர் போஸ்டர்களா? படக்குழுவில் உள்ள அனைவரும் தங்களது மனம்விட்டு நேரமெடுத்து பேசியதே படத்தின் உண்மையான வெற்றிக்கு சாட்சி.

சொன்ன சொல்லைக் காப்பாற்றினேன்

பல நாள்களுக்கு முன்பு என்னிடம் இந்த கருப்பு நிற ஷர்ட் ரசிகர்களால் என்னிடம் கொடுக்கப்பட்டு வெற்றி விழாவில் அணியுமாறு கூறினார்கள். நான் மறக்கவில்லை. தற்போது அணிந்து வந்துள்ளேன். படத்தை வெற்றி பெற செய்ததுக்கு நன்றி. எப்படியோ சொன்ன சொல்லக் காப்பாற்றிவிட்டேன்.

வெள்ளத்தில் கஷ்டப்பட்டிருக்கும் மக்களுக்கு இந்தப் படம் ஒரு ஆறுதலாக இருப்பது மிக்க மகிழ்ச்சி.

இயக்குநருடன் அடுத்த படம்

இந்தப் படத்தின் வெற்றியை நான் எடுத்துக்கொள்ளவில்லை. அதை இயக்குநர் விவேக் பெயரிலேயே வைத்துவிடுகிறேன். இதற்கு முன்பாக வலுவான டிராமாவை அடடே சுந்தரா படத்தில் எடுத்துவிட்டார்.

தற்போது, மாஷ் அதிரடி கமர்ஷியல் எடுத்துவிட்டார். அடுத்த முறை நாங்கள் படம் எடுத்தால் திரையரங்கில் யாரும் சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்கக் கூடாது. விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். அந்த அளவுக்கு ஒரு நகைச்சுவையாக ஒரு படத்தை எடுக்க வேண்டும். அதிலும் நாம் யாரென்று காட்ட வேண்டும்.

படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா

சரிபோதா சனிவாரம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் நாயகன் எஸ்.ஜே.சூர்யா. நாயகனாக இல்லாவிட்டாலும் படத்தை தனதாக கருதி வேலைப் பார்க்கும் நபர். படத்தில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் 100 சதவிகிதத்தை தருவது அவரது பழக்கம். இந்தப் படத்தில் என்னைவிட அவர் புகழடைந்தது எனக்கும் மகிழ்ச்சியே.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்

இசையமைப்பாளர் பிஜோய்தான் எனது அடுத்த அதிரடி படங்களுக்கு இசையமைக்க வேண்டுமென இப்போதே ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தின் வெற்றியில் அவருக்கும் ஒரு தனித்த பங்கு இருக்கிறது. இசையில் ஏதோ ஒரு அற்புதத்தை நிகழ்த்துகிறார்.

கடைசி நேரத்தில் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு இரவுப் பகலாக வேலைப் பார்த்தார். அவருக்கும் எனது நன்றிகள் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT