ஜூனியர் என்டிஆரின் தேவரா டிரைலர் அப்டேட்!
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது, ஜுனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கிவரும் இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜான்வி கபூர், சயிஃப் அலி கான், நந்தமுரி கல்யான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாடல் கவனம் பெற்றது. இப்படம் வருகிற செப்.27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பில் டிரைலர்
இந்நிலையில் படத்தின் டிரைலர் வரும் செப்.10ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த டிரைலர் வெளியாகவிருக்கிறது.
3 மணி நேர படம்?
இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக இருக்குமென தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.