நடிகை ரோகிணி  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பாலியல் புகார்களுக்கு தமிழ் திரையுலகில் ரோகிணி குழு

தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது

DIN

தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மற்றும் பிற மீறல்களைத் தீர்க்க நடிகை ரோகிணி தலைமையில் ஒரு குழுவை அமைப்பதாக தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அளிக்கப்படுவதாகக் கூறி, ஹேமா குழு அறிக்கை ஒன்று வெளியாகி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகிலும் நடிகை ரோகிணி தலைமையில் பெண்களுக்கு ஆதரவாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் 68 ஆவது கூட்டத்தில் பங்கேற்ற நடிகை ரோகிணி, ``தமிழ் திரையுலகில் பிரச்னைகளை எதிர்கொண்டவர்கள் முன்வந்து, குழுவில் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். திரைத்துறையினர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டிருந்தால், ஊடகங்களை அணுகுவதற்குப் பதிலாக முதலில் குழுவிடம் புகார் அளிக்க வேண்டும்.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதன் மூலமும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தகவல் தொடர்பு வழிகளை நிறுவுவதன் மூலமும் குழு ஆதரவளிக்கும்.

அனைத்து புகார்களும் சைபர் போலீசாருக்கு அனுப்பப்படும்; மேலும், பாலியல் வன்கொடுமையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்கு தொழில்துறையில் இருந்து தடை செய்யப்படுவார்கள்’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT