நடிகை சம்யுக்தா மேனன்.  
செய்திகள்

போர் வீராங்கனையாக சம்யுக்தா! பிறந்தநாளில் 3 புதிய பட போஸ்டர்கள்!

நடிகை சம்யுக்தா மேனன் பிறந்தநாளில் 3 புதிய பட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

DIN

மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார். 

நடிகர் தனுஷ் உடன் நடித்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் 2022இல் அறிமுகமான சம்யுக்தாவின் விரூபாக்‌ஷா திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘ஆதி சக்தி’ என்ற அமைப்பை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்யுக்தா மேனன்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும் தெலுங்கில் ஸ்வயம்பு படத்திலும் பெயரிடப்படாத நகைச்சுவை படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட்டிலும் (ஹிந்தியில்) அறிமுகமாகவுள்ளார். காஜோல், பிரபுதேவா நடிக்கும் மஹாராக்ணி படத்தில் சம்யுக்தா நடிக்கிறார்.

இந்நிலையில், அவரது 29ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்வ்யம்பு என்ற படத்தில் நடிக்கிறார். இதன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். பிக்ஷல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இத்துடன், மேலும் 2 பட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஷர்வா 37 படத்தில் தியா கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு வெளியிட்டுள்ளது.

தியா கதாபாத்திரத்தில் சம்யுக்தா...

பிஎஸ்எஸ்12 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாகம் தீர்க்கும் இளநீருடன்... ரோஸ் சர்தானா

ஒருநாள் தொடருக்கான அணியில் என்னுடைய பெயர் இருக்காதென முன்பே தெரியும்: ஜடேஜா

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் தொல்லை? பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு மதிப்பு அதிகம்! முதல்வர் ஸ்டாலின்

நிவின் பாலியின் சர்வம் மயா டீசர்!

SCROLL FOR NEXT