வாஸ்கோடகாமா போஸ்டர்.  
செய்திகள்

ஓடிடியில் கவனம்பெறும் வாஸ்கோடகாமா!

நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா ஓடிடியில் அதிகமான பார்வைகளை பெற்று வருகிறது.

DIN

பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.  

2016, பிப்ரவரி 28 அன்று ஸ்ருதியைக் காதல் திருமணம் செய்தார் நடிகர் நகுல். ஸ்ருதி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார் நகுல். 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நீண்ட நாள்களாக வெளிவராமல் இருந்தன்.

டி3, நிற்க அதற்கு தக ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் ‘தி டார்க் ஹெவன்’ எனும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் போஸ்டர் வெளியானது.

பின்னர், ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ள வாஸ்கோடகாமா படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியானது.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முனிஸ்காந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் செப்.6ஆம் தேதி அமேசான் பிரைம் , ஆஹா தமிழில் வெளியானது.

அமேசானில் 5 மில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT