ஓடிடியில் வெளியானது சண்முக பாண்டியனின் கொம்புசீவி!
சண்முக பாண்டியனின் கொம்புசீவி திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
சண்முக பாண்டியனின் கொம்புசீவி படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் ’கொம்புசீவி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
நகைச்சுவை பாணியில் கேங்ஸ்டர் கதையாக உருவான கொம்புவீசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகாவும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஸ்டார் சினிமாஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கஞ்சா கடத்தல் மற்றும் காவல்துறையினருடனான மோதலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் காளி வெங்கட், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் கொம்புசீவி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று(பிப். 14) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Shanmuga Pandian's film Kombuseevi has been released on the OTT platform and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.