விராட் கோலியுடன் ராதிகா.  படம்: இன்ஸ்டா / ராதிகா சரத்குமார்.
செய்திகள்

விராட் கோலியுடன் ராதிகா!

நடிகை ராதிகா சரத்குமார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகை ராதிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல 200க்கும் அதிமான படங்களில் நடித்துள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சர்ச்சையான ஹேமா கமிட்டி குறித்து பேசும்போது மலையாள படப்பிடிப்பின்போது கேரவன்களில் உடைமாற்றுவதை விடியோ எடுக்கப்பட்டது குறித்து பேசி இருந்தார்.

அரசியலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக தமிழில் லவ் டுடே, கொலை, சந்திரமுகி 2, மேரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ராதிகா சரத்குமார் கூறியதாவது:

மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் இருப்பவர் விராட் கோலி. அவரது விளையாட்டு ஆர்வத்தினால் நம்மைப் பெருமைப்பட வைத்தவர். அவருடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி. செல்ஃபி புகைப்படத்துக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

சச்சின் சாதனையை முறியடிக்கும் கோலி

விராட் கோலி இன்று சென்னை வந்தடைந்தார். வங்கதேசம் உடனான டெஸ்ட் போட்டியில் விளையாட சென்னை வந்த விராட் கோலியை ராதிகா விமானத்தில் சந்தித்துள்ளார்.

147 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக குறைந்த போட்டிகளில்(623) 27,000 சர்வதேச ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.

இந்திய வீரர் விராட் கோலி, இதுவரை 591 போட்டிகளில் விளையாடி, 26,942 ரன்களை குவித்துள்ளார்.

இன்னும் 58 ரன்கள் எடுத்தால் போது சச்சினின் சாதனை முறியடிக்கப்படும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி ஆர்வத்தை தூண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள்! யாருக்கெல்லாம் ரெட் கார்டு?

பிகாரில் பெண்களின் நலத்திட்டங்களை நிறுத்த ஆர்ஜேடி முயற்சி: ஸ்மிருதி ராணி!

சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

SCROLL FOR NEXT