நடிகை தர்ஷனா இன்ஸ்டாகிராம்
செய்திகள்

மூன்று முடிச்சு தொடரில் இணையும் நடிகை தர்ஷனா!

ஈரமான ரோஜாவே புகழ் நடிகை ஸ்வாதி உடன் இணைந்து நடிகை தர்ஷனா நடிக்கவுள்ளார்.

DIN

ஈரமான ரோஜாவே புகழ் நடிகை ஸ்வாதி உடன் இணைந்து நடிகை தர்ஷனா நடிக்கவுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மூன்று முடிச்சு தொடரில் தர்ஷனா நடிக்க இருக்கிறார்.

நடிகை தர்ஷனா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவா தலையா தொடரில் நாயகியாக நடித்தவர். தற்போது மூன்று முடிச்சு தொடரில் நடிக்கவுள்ளதால், இரு நடிகைகள் இத்தொடரில் நடிக்கின்றனர்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகர் நியாஸ் நாயகனாகவும், ஸ்வாதி கோண்டே நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

நியாஸ், ஸ்வாதி நடிக்கும் மூன்று முடிச்சு தொடரின் போஸ்டர்

இது மட்டும் இல்லாமல் ப்ரீத்தி சஞ்சீவ் அம்மாவாகவும், நடிகர் பிரபாகரன் அப்பாவாகவும் நடித்துள்ளனர். கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ள தேனி முருகன் பாரதிராஜாவின் தம்பி ஆவார்.

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் கதை ஆசிரியரும், தென்னவன் படத்தை இயக்கிய இயக்குனருமான நந்தன் சி முத்தையா இந்தத்தொடரை இயக்குகிறார்.

மூன்று முடிச்சு தொடரில் நடிகை ஸ்வாதி முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் நிலையில், நடிகை தர்ஷனாவும் இத்தொடரில் இணையவுள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரபான பூவா தலையா தொடரில் நாயகியாக நடித்தவர்.

பூவா தலையா தொடரில் நடிகை தர்ஷனா

மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய இரண்டாவது வாரத்திலேயே டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. தற்போது மற்றொரு நாயகியும் அறிமுகமாவதால் இத்தொடர் வரும் வாரங்களில் அதிக டிஆர்பி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT