விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் வெளியான எல்ஐகே படப்பிடிப்பு விடியோ!
இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் எல்ஐகே படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டு படக்குழு வாழ்த்தியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டு தி ரூட், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வாழ்த்து தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.