கங்குவா திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வேட்டையனுடான போட்டியிலிருந்து கங்குவா விலகியது. இதனால், சூர்யா ரசிகர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டதால் நடிகர் சூர்யா, ‘மூத்தவரான சூப்பர் ஸ்டாருக்கு வழிவிடுவதே சரியானது’ என்றதுடன் கங்குவா பிரம்மாண்டமாக உருவாகி வருவதையும் தெரிவித்து ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.