நடிகர்கள் மம்மூட்டி, விநாயகன். 
செய்திகள்

விநாயகனுக்கு வில்லனாகும் மம்மூட்டி!

மம்மூட்டியின் புதிய படத்தின் அப்டேட்...

DIN

நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது.

இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் ப்ருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலக, விநாயகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆச்சரியமாக, இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்மூட்டி நடிக்கிறாராம்.

புழு, பிரம்மயுகம் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய மம்மூட்டி, மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

17 ஆண்டுகளில் முதல்முறை... தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

SCROLL FOR NEXT