செய்திகள்

லியோ வசூலை முறியடிக்காத கோட்!

கோட் வசூல் குறித்து...

DIN

கோட் திரைப்படத்தின் வசூல் லியோவின் வசூலை முறியடிக்கவில்லை.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

கோட் படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இதனால், படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.

முக்கியமாக, கேரளம் மற்றும் ஆந்திரத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. கோட் படத்தால் தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 13 நாள்களில் கோட் திரைப்படம் ரூ.413 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனாலும், ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த லியோவின் வசூலை முறியடிக்க முடியாது என்றே தெரிகிறது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான கோட், அதே அளவிற்கான வசூலை மட்டுமே அடைந்திருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செப். 27 ஆம் தேதி மெய்யழகன், தேவரா உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் கோட் திரைப்படத்தை முழுமையாக திரையரங்குகளிலிருந்து நீக்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT