நடிகர் ரஜினிகாந்த்துடன் புகழ். 
செய்திகள்

’என்றும் சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் புகழ்!

DIN

நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் நடிகர் புகழ்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் புகழ். தொடர்ந்து, பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். விரைவில், இவர் நடித்த கோலிசோடா ரைசிங் இணையத் தொடர் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை அவரின் இல்லத்தில் வைத்து நேரில் சந்தித்துள்ளார் புகழ்.

இதனைத் தெரியப்படுத்த அவர் வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார்.

மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார்..” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT