லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணுக்கு மீண்டும் பதிலளித்த பிரகாஷ் ராஜ்!
நடிகர் பிரகாஷ் ராஜ் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு விடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு விடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ், “நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில்தான் இந்த பிரச்னை நடந்துள்ளது. தயவு செய்து விசாரித்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள். இப்பிரச்னையை ஏன் தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கெனவே போதுமான அளவு வன்முறை பதற்ற சூழல் உள்ளது. மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி” எனக் கூறியிருந்தார்.
இதற்கு பவன் கல்யாண், நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!
இதற்கு பதிலடியாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
டியர் பவன் கல்யாண் அவர்களே, உங்களது செய்தியாளர் சந்திப்பைப் பார்த்தேன். நான் கூறியதை தவறாகப் புரிந்துக்கொண்டு நீங்கள் பேசியது வியப்பாக இருக்கிறது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதை முடித்துவிட்டு உங்களது ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கிறேன். அதற்குள், எனது பழைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன் என்றார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.