லப்பர் பந்து படத்தில் அன்பு கதாபாத்திரம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.  
செய்திகள்

அன்பு கதாபாத்திரம் நான்தான்: லப்பர் பந்து பட இயக்குநர்

லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த அன்பு கதாபாத்திரம் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் இருந்து எடுத்ததாக இயக்குநர் கூறியுள்ளார்.

DIN

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மையக் கதாபத்திரமாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த வாரம் 6 தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில், இப்படமே பரிந்துரை பட்டியலில் இருப்பதால் பல திரையரங்குகளில் படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசியதாவது:

படத்தில் முதல் காட்சியில் வரும் சட்டையில் இங்க் அடித்து காட்டப்படும் பள்ளி மாணவனாகிய அன்பு கதாபாத்திரம் நான்தான். அது எனது நிஜ வாழ்க்கையில் நடந்தது. நான் பந்து வீசுவதில் ஆர்வம் உடையவன். எனக்கு ஒர் அணியில் விளையாட ஆசை. எனது பள்ளி சீனியர் ஒருவர் அந்த அணியில் விளையாட என்னை அழைத்தார். நான் அதற்காக வேகமாக தேர்வை எழுதிவிட்டு மினி பேருந்தில் ஏறி சென்றேன். அந்த அண்ணா கதாபாத்திரம்தான் கெத்து.

அந்தப் போட்டியில் கெத்து அண்ணா ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்படி வாங்கும்போது, திடீரென ஒரு கை துடைப்பத்தால் அந்த அண்ணாவை அடிக்கிறது. யாரென்று பார்த்தால் அது அவரது மனைவி. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எனக்கு அய்யப்பனும் கோஷியும் படம் மிகவும் பிடித்திருந்தது. அதன் ஈகோவையும் கிரிக்கெட்டையும் வைத்து அதே மாதிரி இந்தப் படத்தை எடுக்க நினைத்தேன். எனக்கு பிடித்த கெத்து அண்ணாக்கு எதிராக நானே இருந்தால் எப்படி இருக்குமென நினைத்து எடுக்கப்பட்டதுதான் லப்பர் பந்து படம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT