நயன்தாரா வெளியிட்ட காதுகுத்து விடியோ.  படங்கள்: இன்ஸ்டா / நயன்தாரா
செய்திகள்

காதுமா...! சினிமா வசனங்களுடன் நயன்தாரா வெளியிட்ட காதுகுத்து விடியோ!

நடிகை நயன்தாரா வெளியிட்ட காதுகுத்து விடியோவில் அவர் பேசிய வசனங்கள் வைரலாகி வருகின்றன.

DIN

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது.

தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டனர்.

சமூக வலைதளங்களில் குழந்தைகள், வியாபாரம் தொடர்பான பதிவுகளுடன் தன்னம்பிக்கை தொடர்பான பதிவுகளை பதிவிடுவார்.

தன்முனைப்புடன் வாழ்ந்துவரும் நயன்தாரா வெளிட்ட சமீபத்திய விடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், தனக்கு காதுகுத்தும் விடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா சினிமா வசனங்களைப் பேசுகிறார்.

விஜய்யின் உன்னால் முடியும் தோழா பாடலை என்னால் முடியும் தோழா என்றும் நானும் ரௌடிதான் பாடலில் வரும் காதுமா வசனமும் பிறக்கும்போதே தயார் எனவும் தன்னம்பிக்கை நிறைந்த வசனங்களை விடியோ முழுவதும் பேசுகிறார். ஃபகத்தின் ஆவேசம் பட இல்லுமினாட்டி பாடலையும் பதிவிட்டுள்ளார்.

இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT