மங்களவாரம் பட போஸ்டர், துருவ் விக்ரம்.  
செய்திகள்

தெலுங்கில் அறிமுகமாகும் துருவ் விக்ரம்!

பிரபல தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமெக்கில் நாயகனாக அறிமுகமானார் துருவ் விக்ரம். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப்படம் முதலில் இயக்குநர் பாலாவால் எடுக்கப்பட்டு அது விக்ரமுக்கு பிடிக்காமல் மீண்டும் வேறு இயக்குநரால் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்து விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்து வருகிறார்.

சர்சையான இயக்குநர் அஜய் பூபதி உடன்

இந்தப் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மங்களவாரம் (தமிழில் செவ்வாய்க்கிழமை) ஆகிய படங்கள் எடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் பூபதி.

கதாநாயகியாக நடிகை பாயல் ராஜ்புத்தின் போஸ்டரில் இருந்து படம் சர்சையாகவே தொடங்கி வரவேற்புடன் விமர்சனங்களும் வந்தது குறிப்பிடத்தக்கது.

மங்களவாரம் போஸ்டர்.

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இறுதிப் பட்டியலில் மங்களவாரம் படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியப் படமாக வெளியாகியது. உயர்தரமான தொழில் நுட்பங்களுடன் படமாக்கியிருந்தார்கள். காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜனீஷ் ஏக்நாத் இசை மிகவும் புகழ்பெற்றது.

தெலுங்கில் அறிமுகமாகும் துருவ் விக்ரம்

இந்நிலையில், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதகாவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு, தமிழில் ஆக்‌ஷன் த்ரில்லராக இந்தப்படம் உருவாக இருக்கிறது. முதன்முறையாக துருவ் விக்ரம் தெலுங்கில் அறிமுகமாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT